Friday, May 21, 2010

சோதனை மேல் சோதனை... - 1

சமீபத்தில் கார் ரேஸில் கிடைத்த ஓய்வின்போது சென்னை திரும்பினார் அஜித். வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்க நேர்ந்தது. வழக்கமான முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொருமையாக பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


"மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!"
என்றிருக்கிறார்.

தல, இருந்தாலும் நீங்கள் இவ்வளவு அப்பாவியாக இருத்தல் கூடாது. இன்றைய தேதியில் யார் தான் தோல்விப் படங்கள், மட்டமான படங்கள் கொடுக்கவில்லை? யாரும் இந்த விசயத்தில் விதிவிளக்கில்லை. நீங்கள் இப்படி எல்லாம் சாதாரனமாக, வெளிப்படையாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை.

இருப்பினும், நீங்கள் உங்கள் பதிலில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கோ அல்லது உங்களின் ரசிகர்களுக்கோ அல்லது யோசிக்கும் திறன் உள்ள எவருக்கும் நன்கு புலப்படும். மட்டமான படங்கள் தருவது தவிர்க்கப் பட வேண்டிய விசயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ரசிகர்களின் பணமும் நேரமும் விரயமாவது பற்றி நீங்கள் அக்கறையுடன் பேசும்போது இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகரா என வியந்து போகிறேன். உங்களை சுற்றியுள்ள பிற நடிகர்களைப் பாருங்கள். அவர்கள் இது போன்ற கருத்துக்களை எதேனும் ஒப்பிப்பதுண்டா? தோல்வி படமோ மட்டமான படமோ, சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிடுவர். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

அதே சமயம், உங்களது இந்த பதிலை பொது மக்கள் வேறு மாதிரி பார்க்கக் கூடும். அதாவது, உங்களுக்கு 'மார்கெட்' போய்விட்டது. படங்கள் சரியாக போகாத பட்சத்தில் தான் மீண்டும் கார் பந்தயங்களுக்கு திரும்பி விட்டீர்கள் என பல கருத்துகள் உங்களைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. அதனால், இது போன்ற சாக்குபோக்குகள் உங்களுக்கு தேவை படுகிறது என எண்ணக் கூடும்.

மேலும், நீங்கள் ஒன்றும் அறுபதாம் வயதில் உள்ளவர் இல்லையே. அந்த வயதில் உள்ளவர்களை சும்மா இருப்பதே மேல் எனலாம். கண்டிப்பாக நீங்கள் அல்ல. நீங்கள் அறுபது வயதைத் தாண்டும் போது அந்த கால கட்டம், சூழ்நிலை கண்டிப்பாக வேறுபட்டிருக்கும். நிறைய புதியவர்கள் வந்துவிடுவார்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், உங்களின் இன்றைய படங்கள் தான் உங்கள் பேரையும் புகழையும் எதிர்காலத்தில் நிர்னயம் செய்யும். சும்மா இருந்தால் என்ன கிடைக்கும்?

அப்படியொன்றும் நடிப்பில் நீங்கள் சலைத்தவர் அல்ல. உங்களுல் ஒரு மாபெறும் நடிகன் இருக்கிறான். அந்த திறமையை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை, தாராளமாக பணியாற்றலாம். ஓரளவு வெற்றிக் கனியை ருசித்த மிஷ்கின், வசந்தபாலன், ஜனநாதன் போன்ற இயக்குணர்களுடன் இணையளாம், தப்பே இல்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு நல்ல, சுவாரசியம் மிக்க கதை, திரைக்கதை தரக் கூடிய ஒரு இயக்குணர். அதற்கு முதலில் வழி தேடுங்கள். அதை விடுத்து தயவு செய்து, இது போன்ற கருத்துக்களைக் கூறி என்னைப் போன்ற ரசிகர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...

5 comments:

  1. He's easily the most talented actor of his generation. He's shown more versatility-villainism, feminism, the roles in Mugavari- the action hero roles-than his peers.

    Unlike his peers, he wants to enjoy his life. Profession part of your life. Profession shouldn't become your life.

    ReplyDelete
  2. தல சொல்லியதில் எந்த தவறும் இல்லை... எத்தனையோ முறை அவர் மார்கெட் இழந்துவிட்டார் , அஜித் இனி அவ்வளவுதான் என்று மற்றவர்கள் கிளப்பி விட்ட பொழுது எல்லாம் மீண்டு விஸ்வரூபம் எடுத்து வந்தவர் தல ... அவரின் இந்த பேட்டி அவரின் யை தான் காட்டுகிறது... தல சொன்னதை போல செய்து காட்டினால் நல்லதுதான் ... மேலும் இன்றைய இயக்குனர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது ... அதற்க்கு அஜித் போன்ற நடிகர்கள் என்ன செய்வார்கள்...

    ReplyDelete
  3. //தல சொல்லியதில் எந்த தவறும் இல்லை... எத்தனையோ முறை அவர் மார்கெட் இழந்துவிட்டார் , அஜித் இனி அவ்வளவுதான் என்று மற்றவர்கள் கிளப்பி விட்ட பொழுது எல்லாம் மீண்டு விஸ்வரூபம் எடுத்து வந்தவர் தல ... //

    ஆம், ஃபீனிக்ஸ் பறவை போல... :)

    //அவரின் இந்த பேட்டி அவரின் யை தான் காட்டுகிறது... தல சொன்னதை போல செய்து காட்டினால் நல்லதுதான் ... மேலும் இன்றைய இயக்குனர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது ... அதற்க்கு அஜித் போன்ற நடிகர்கள் என்ன செய்வார்கள்... //

    எல்லாருக்கும் சரக்கு தீர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. யானைக்கும் அடி சருக்கும் என்று சொல்லலாம். இருந்தாலும், 'established' இயக்குணர்களிடன் சேர்ந்து பணி புரிவதனால் 'minimum guarantee' ஒரு இருக்கும்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

    ReplyDelete
  4. இனிமேல் படம் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. மட்டமான படம் நடிப்பதற்கு பதிலாக சும்மா இருக்கலாம் என்றுதான் சொன்னார். இதை தவறாக எடுக்ககூடாது. அதே போல மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு பதிலாக நல்ல கதை அம்சம் உள்ள மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்கலாம். இதனால் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியிட முடியும். செய்வாரா தல?

    ReplyDelete
  5. @ Bala

    ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே என்று உடும்புப் பிடியாக இருக்கிறார். பார்ப்போம்...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

    ReplyDelete