Wednesday, June 30, 2010

அன்றே சொன்னேன்...

கௌதம் மேனன் அவர்கள் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்குவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று சமீபத்தில் எழுதியிருந்தேன். அல்லது கணித்திருந்தேன் என்றும் சொல்லலாம். நான் யூகித்த சாத்தியக் கூறுகள் அச்சு அசலாக தவறாக இருப்பினும், அதன் முடிவு என்னமோ சரியாகத் தான் உள்ளது. அதாவது அஜித்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் மேனன் இயக்கவில்லை. அதைப் படிக்க விரும்பினால் இங்கே செல்லவும்.


இது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். மின்னலே, காக்க காக்க, 49-ஆவது படம், இப்போது 50-ஆவது படம் என்று இந்த ஏமாற்றம் நான்கு முறை நடந்தேறியிருக்கின்றது. இனிமேல் பழகிக் கொள்ள வேண்டிய சக்தியைப் பெற்றுவிட்டேன். அஜித் கார் பந்தயத்திலிருந்து விலகியது, அதே சமயம் கௌதம் மேனன் தன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்கவிருப்பது போன்ற சம்பவங்கள் இவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுத்து வருகின்றன. ஒரு வேளை அஜித் கார் பந்தயத்திலிருந்து அக்டோபரில் திரும்பியிருந்தால், முன்பே அறிவிக்கப்பட்டபடி கௌதமுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கலாமோ? அல்லது நான் முந்தய பதிவில் கணித்தது போல், அப்பொழுது கௌதம் வேறு படத்தில் மும்முரமாக இருந்து அஜித்தின் 50-ஆவது படத்தைக் கைக்கழுவியிருப்பாரோ? பல குழப்பங்கள். இதை விதி என்று எடுத்துக் கொள்ளலாமா?

சுவாரசியமாக, அஜித்தின் அடுத்த 51-ஆவது படத்தையும் தயாநிதி அழகிரி தயாரிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, 51-ஆவது படத்தை கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக கௌதம் இயக்குவார் என்று சில தரப்பினர் சொல்கிறார்கள். மாறாக, இதைப் பற்றி அஜித்தோ அல்லது கௌதமோ இன்னும் அதிகாரப்பூர்வமான பதில்கள் கூறாதது வருத்தத்தை அளிக்கின்றது. 51-ஆவது படத்திலும் இந்த கூட்டணி சேரவில்லையேல், ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே சொன்னது போல, இன்னுமொறு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள சக்தி பிறந்துவிட்டது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...

51-ஆவது படத்தைப் பற்றி பேசினோம். 50-ஆவது படம் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். சமீபத்திய தகவல் படி, இதனை தயாநிதி அழகிரி தயாரிக்க வேறொரு இயக்குணர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் தான் 'சென்னை 600028' புகழ், வெங்கட் பிரபு. இப்போதைக்கு படத்தின் பெயர் 'மங்காத்தா - உள்ளே வெளியே'. மங்காத்தாவின் களத்தில், இது மும்பையில் நடக்கும் தாதா கதை என்று தெரிகிறது. அஜித்திற்கு தாதா/ரௌடி பாத்திரம் தான் செய்ய வரும் என்று முடிவு பண்ணிவிட்டார்கள் போல. தலைப்பையும் ஒரு வரி கதையையும் கேட்டால், சுவாரசியமாகத் தான் இருக்கிறது.


உண்மையைச் சொல்லப் போனால், இந்த கூட்டணியில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. வெங்கட் பிரபு இதுவரை 'சின்ன' ஹீரோக்களை கும்பலாக வைத்து படங்கள் எடுத்தவர். அவருக்கு தனி ஒரு 'மாஸ்' ஹீரோ படம் பண்ணும் அளவுக்கு திறமை உள்ளதா என்று படம் வந்த பின்னரே தெரியும். வெங்கட் பிரபுவை அவமானப் படுத்துவதோ அல்லது அவரது திறமையை குறை சொல்வதோ, சந்தேகிப்பதோ என் நோக்கம் அல்ல.

இது நம் 50-ஆவது படம். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படம். அப்பேற்பட்ட விஷயத்தில், இத்தனை 'ரிஸ்க்' வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இவர் ஒரு ஆஷ்தானமான அஜித் விசிறி. இவரும் சரணைப் போல படம் முழுவது தல புராணம் பாடி காரியத்தைக் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அதே சமயத்தில், ஒரு பக்கம் சிறிதளவு சந்தோஷம். இந்த இயக்குணர் ஓரளவு அனுபவம் மிகுந்தவர். ராஜு சுந்தரத்தையே தாங்கிக் கொண்டோம். எப்படி நம்ம 'தல'யை வெங்கட் பிரபு கையாளுகிறார் என்று பார்ப்போம். எல்லாம் இனிதே நடைப்பெற இறைவனைப் பிரார்த்திகிறேன்.

5 comments:

  1. தலைவரே இந்த செய்தி கூட மர்மமாத்தான் இருக்கு. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதுவரை எந்த முடிவும் செய்யக்கூடாது. வெங்கட் பிரபு அஜித்தை வித்தியாசமான கோணத்தில் திரையில் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
    என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்?

    ReplyDelete
  2. //தலைவரே இந்த செய்தி கூட மர்மமாத்தான் இருக்கு. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதுவரை எந்த முடிவும் செய்யக்கூடாது. //
    வெங்கட் பிரபு முகப்புத்தகத்திலும் உறுதி செய்துவிட்டார். நண்பரின் நண்பர் ஒருவர் கங்கை அமரனிடமே கேட்டாகிவிட்டது. அவரும் உறுதிபடுத்தி விட்டார். இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிடும் பாருங்கள்.

    //வெங்கட் பிரபு அஜித்தை வித்தியாசமான கோணத்தில் திரையில் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். //
    இப்படி எதிர்பார்த்தே எனது ஆயுள் முடிந்துவிடும் போலிருக்கு. வேறென்ன செய்ய, நம்புவோம்.

    //என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்? //
    ஆம், மிகவும் 'பிசி'. உலகக் கிண்ணக் காற்பந்து இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. அலுவலகத்திலும் பலத்த வேலை. அவ்வப்போது உங்களது வலைப்பூவையும் நண்பர் ராஜாவின் வலைப்பூவையும் எட்டிப் பார்ப்பதுண்டு.
    மேலும், உங்களது வலைப்பூவில் முன்பே தெரிவித்தது போல், நம்ம தல அஜித்திற்கு 'Exclusive Forum' ஒன்றைத் துவங்கியுள்ளேன். இவை எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பதால், ரொம்பவே 'பிசி'.

    'Forum'-இல் சேர்ந்து சிறப்பிக்க அழைப்பு விடுத்தும் உங்களிடமிருந்து எந்தவொறு reaction-உம் வரவில்லையே... :(
    கண்டிப்பாக வந்து 'join' பண்ணுங்க. :)

    ReplyDelete
  3. தல அம்பத்தி ஒன்றாவது படம் கண்டிப்பாக கௌதம் மேனன்தான் ... மேலும் வெங்கட் பிரபு கண்டிப்பாக தலையை கவுத்த மாட்டார் என்று நினைக்கிறன் ...

    meanwhile i saw ur forum.. but i don't know how to join to tat... explain me thala

    ReplyDelete
  4. //தல அம்பத்தி ஒன்றாவது படம் கண்டிப்பாக கௌதம் மேனன்தான் ... மேலும் வெங்கட் பிரபு கண்டிப்பாக தலையை கவுத்த மாட்டார் என்று நினைக்கிறன் ... //

    ம்ம்ம்... இன்னொறு முறை எதிர்பார்க்கலாமா...

    //meanwhile i saw ur forum.. but i don't know how to join to tat... explain me thala //

    'Rajakani' என்ற பெயரில் ஒருவர் பதிவு செய்துள்ளார். அவர் நீங்கள் இல்லையா?
    நீங்கள் இல்லையேல், உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள். விளாவரியாக தெளிவுபடுத்துகிறேன். :)

    ReplyDelete