Friday, June 11, 2010

உலகக் கிண்ண காற்பந்து காய்ச்சல்...

இன்னும் சில மணி நேரங்களில், உலக கிண்ண காற்பந்து தொடங்கவிருக்கிறது. இந்த முறை இப்போட்டியை எடுத்து நடத்த ஆப்பிரிக்கா நாடு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. மொத்தம் முப்பத்து இரண்டு நாடுகள் பங்கேற்கின்றன. வழக்கம் போல நான்கு நாடுகள் விகிதம், எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொறு குழுவிலும் அதிக புள்ளிகள் பெறும் முதலாம் மற்றும் இரண்டாம் குழுக்கள் அடுத்த பதினாரு சுற்றில் (Round of 16) மோத வேண்டும். அடுத்து கால் இறுதி சுற்று, அரை இறுதி சுற்று என முன்னேறி இறுதி ஆட்டத்திற்கு வர வேண்டும்.

பொதுவாகவே உலகமே இப்போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கும். வேறு எந்த ஒரு விளையாட்டிற்கும் இந்த அளவு ஒரு 'இது' இருக்காது என ஆணித்தரமாக சொல்வேன். மலேசியாவில் உலகக் கிண்ண காற்பந்து என்றாலே திருவிழாக் கோலம் தான். ஜூன் பதினொன்று (இன்று) ஆரம்பிக்கும் இந்த காற்பந்து திருவிழா விமரிசையாக ஒரு மாதம் நீடிக்கும். இறுதி ஆட்டம் சரியாக ஜூலை பதினொன்றுக்கு நடைபெறும்.


எனது ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. உலகக் கிண்ன காற்பந்து என்றால் சும்மாவா? எத்தனை கொண்டாட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம், எத்தனை ஏமாற்றம், கண்ணீர், அழுகை என அடுத்த ஒரு மாதம் கடந்து போவதே தெரியாது.

நான் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறேன் என கேட்பவர்களுக்கு, அன்றும் இன்றும் இனி என்றும் எனது ஆதரவு அர்ஜெந்தினாவிற்கே (Argentina). சின்ன வயதில் இருந்து உதித்த பற்று அது. ஒருகால், எனது விருப்ப அணி ஜெயிக்காவிட்டால், அடுத்து நான் வெற்றியடைய வேண்டுவது பிரசில் (Brazil) அணி தான். இவ்விரண்டு அணியும் மன்னைக் கவ்வினால், தொடர்ந்து போட்டியைக் கண்காணிக்கும் எனது நாட்டம் கனிசமாக குறைந்துவிடும்.


அலுவலகத்தில், உலக கிண்ன கணிப்பு 'World Cup Predictions' எனும் விளையாட்டில் பங்கெடுத்துள்ளேன். சூது தான். நூறு வெள்ளி கட்டனம். நானும் அர்ஜெந்தினாவும் வெற்றி பெற உங்கள் ஆசி தேவை.

எனக்கு உலக கிண்ன காற்பந்து காய்ச்சல் ஆம்பமாகிடிட்டது. உங்களுக்கு? அப்படியே, எந்த அணிக்கு உங்கள் ஆதரவு என்பதை பின்னூட்டமிடலாமே.

10 comments:

  1. கால்பந்து பார்க்க தொடங்கினால், கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும். நான் இறப்பதற்குள் இந்திய அணி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடவாவது (ஜெயிப்பதை அப்புறம் பார்க்கலாம்) வேண்டும். இப்போதைக்கு எனக்கு பிடித்த அணி ஜெர்மனி. அதன் பின் பிரேசில். 2002 உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை மிக ஆர்வமாக பார்த்து கடைசியில் ஜெர்மனி தோற்றுவிட்டது. இந்த வருடம் பார்க்கலாம். இந்த முறை ஆப்பிரிக்க கண்டத்தின் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.
    நன்றி நண்பரே....

    ReplyDelete
  2. For Me....

    1. Brazil
    2. Germeny
    3. France

    ReplyDelete
  3. @Bala
    //கால்பந்து பார்க்க தொடங்கினால், கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும். நான் இறப்பதற்குள் இந்திய அணி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடவாவது (ஜெயிப்பதை அப்புறம் பார்க்கலாம்) வேண்டும்.//

    பொதுவாகவே நான் பார்த்த இந்தியர்கள் அதிகமானோர் இந்த மன நிலையிலேயே உள்ளனர். பின்னர், எப்படி இந்தியா உலக அளவில் விளையாடும்?

    //இப்போதைக்கு எனக்கு பிடித்த அணி ஜெர்மனி. அதன் பின் பிரேசில். 2002 உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை மிக ஆர்வமாக பார்த்து கடைசியில் ஜெர்மனி தோற்றுவிட்டது. இந்த வருடம் பார்க்கலாம். //

    ஜெர்மனி நல்ல தரமான விளையாட்டைக் கொண்டுள்ளது. பிரேசிலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த முறை இவ்விரண்டு அணிகளும் கோப்பைக்கு பலத்த போட்டியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    //இந்த முறை ஆப்பிரிக்க கண்டத்தின் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.//

    கால் இறுதிச் சுற்றோடு காணாமல் போய் விடுவார்கள்.

    ReplyDelete
  4. @Kannan

    வாங்க கண்ணன். உங்கள் பட்டியலில் உள்ள அனைத்து அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர் அல்ல. எல்லாம் கைத்தேர்ந்த அணிகள். பார்ப்போம்...

    வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. :)

    ReplyDelete
  5. @Chitra

    //...... காய்ச்சல் அளவுக்கு இல்லை. தொண்டையில லேசா கிச்ச் கிச்ச் அளவுக்கு.... :-)//

    இது காய்ச்சலுக்கான அறிகுறி தான். எதற்கும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. :P :)

    //..... BRAZIL!!!//

    உங்களுக்கு காற்ப்பந்தில் நாட்டம் உண்டு எனச் சொல்லி என் நெஞ்சில் இடம் பிடித்துவிட்டீர்கள். I'm impressed :)

    ReplyDelete
  6. ஹீ ஹீ எனக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா .. நான் அப்புறம் வாறன் ....

    ReplyDelete
  7. @ராஜா

    உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. ஹிஹி
    (Just Kidding bro) :)

    ReplyDelete
  8. //பொதுவாகவே நான் பார்த்த இந்தியர்கள் அதிகமானோர்

    நான் இப்போது இருக்கும் நிலையை வைத்துதான் சொல்கிறேன். நைஜீரியா, கானா அணிகள் விளையாடும்போது, நமக்கென்ன கேடு? எனக்கும் நம் அணி வெற்றிபெறவேண்டும் என்று பேராவல் உள்ளது. விளையாட தகுதி பெற்றால்தானே வெற்றிபெறுவதற்கு?

    ReplyDelete
  9. @Bala

    //நான் இப்போது இருக்கும் நிலையை வைத்துதான் சொல்கிறேன். நைஜீரியா, கானா அணிகள் விளையாடும்போது, நமக்கென்ன கேடு? எனக்கும் நம் அணி வெற்றிபெறவேண்டும் என்று பேராவல் உள்ளது. விளையாட தகுதி பெற்றால்தானே வெற்றிபெறுவதற்கு? //

    என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மக்களும் அரசாங்கமும் காட்டும் ஆர்வத்தில் ஒரு ஐம்பது சதவிகிதமாவது காட்டினால், இந்தியா காற்பந்தில் எங்கேயோ போயிருக்கும்.
    Btw, நைஜீரியா, கானா போன்ற அணிகளை தப்புக் கணக்கு போட்டு விட்டீர்கள். நேற்று Chile அணி விளயாடுவதைப் பார்த்தேன். மெய் செலிர்த்தது. இந்த முறை பெரிய அணிகளை விட சிறிய அல்லது புகழ் இல்லாத அணிகள் தான் நன்கு விளையாடுகின்றன. :)

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக :)

    ReplyDelete
  10. நைஜீரியா, கானா அணிகளை மேற்கோள் காட்டியதன் காரணம், அந்நாட்டின் மக்கள் தொகை, பொருளாதாரம்.
    நம்ம பைய்சங் புடியா வேறு அணியில் இருந்திருந்தால் இந்நேரம் உலகபுகழ் பெற்றிருப்பார்.

    ReplyDelete